NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உத்தரப் பிரதேசத்தில் கண்டு பிடிக்க பட்ட மோனாலிசா!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் . அந்தவகையில் இவ் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரிவரை நடைபெறும். இந்நிகழ்விற்கு சுமார் 40 கோடி பேர் புனித நீராட வருகை தருவார்கள் என்று கணிக்கப்படுகிறது.

இவ்வாண்டு நடைப்பெற்ற நிகழ்வில் 16 வயதான மோனாலிசா போஷ்லே என்ற பெண் தனது தந்தையுடன் சேர்ந்து பாசி மாலை விற்பனை செய்வதட்காக வந்துள்ளார்.இவரின் தனித்துவமான கண்கள் மற்றும், இயற்கையான அழகால் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறார். இதனால் அவரை பேட்டி காணவும்,புகைப்படங்கள் எடுப்பதற்காகவும் மக்கள் கூட்டம் கூடிய நிலையில் அவரின் பாசி மாலை வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா‘டைரி ஆஃப் மணிப்பூர்’‘ என்ற தனது அடுத்த படத்தில் மோனாலிசாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க விருப்புவதாக தெரிவித்துள்ளார்.தேன் போன்ற கண்கள் கருத்த நிறம் படத்தின் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து கதைக்க போவதாக கூறியிருந்தமை குறிப்பிட தக்கது .

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles