முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஆர்த்தி என்பவரை கடந்த 2004-ம் ஆண்டு கரம் பிடித்திருந்தார் . இத்தம்பதிக்கு இரண்டு ஆன் பிள்ளைகள் உள்ளனர் .இவர்கள் திருமணம் முடித்து 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் , தற்போது தங்களது திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர முடிவு எடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள்தெரிவிக்கின்றனர். மேலும் வீரேந்திர சேவாக் தனது தீபாவளி கொண்டாட்டத்தின் போது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் பாலக்காட்டில் உள்ள விஸ்வ நாகயக்ஷி கோவிலில் எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் எடுக்ப்பட்டிருந்த எந்தவொரு புகைப்படத்திலும் சேவாக்கின் மனைவி ஆர்த்தி இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது .
எவ்வாறாயினும் வீரேந்திர சேவாக் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவர் சார்பிலும் விவாகரத்து தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.