மாத்தளை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி கற்று வரும் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சகலரையும் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக்கோரி குறித்த பாடசாலைக்கு முன்னால் இன்று (3) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பிரதேசவாசிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு, கடந்த சர்வதேச சிறுவர் தினத்தன்று நண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாணவன் ஒருவரே நாலந்த பகுதியில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் மோகன் யோகேஷ் என்ற 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.