திருத்தப்பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றப்படவுள்ளதால், எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவு ஒருமணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 6மணி வரையான காலப்பகுதியில் மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமல்படுத்தப்படவுள்ளது.
கண்டி மாநகரசபை, ஹாரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, பாததும்பர மற்றும் அக்குரணை ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்படவுள்ளது.
திருத்தப்பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றப்படவுள்ளதால், எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரஜவலை, சிறிமல்வத்த, அம்பிட்டிய, அமுனுகம, ஹந்தான, வளல மற்றும் மாவத்தகம ஆகிய பகுதிகளிலும் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.