NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா

அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் புதிய படம் ராமம் ராகவம். தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் உருவாகி இருக்கும் ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாலா பேசும் போது, “சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கு நான் ரசிகன். கடுமையாக உழைக்கக்கூடியவர்.”

“மற்றவர்களுக்கு உதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்,” என்று தெரிவித்தார்.

Share:

Related Articles