T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில், நியூசிலாந்து அணி பந்து வீச்சாளர் லோகிபெர்குசன் அரிய சாதனையொன்றை படைத்துள்ளார்.
நியூசிலாந்து – பப்புவா நியூ கினியா அணிகள் நேற்று மோதின. பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றியுடன் தொடரை விட்டு விலகியமை குறிப்பிடத்தக்கது.
ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரை வீசினால் அது மெய்டன் ஓவராக கருதப்படும், அந்தவகையில் பெர்குசன் வீசிய 4 ஓவர்களில், அதாவது 24 பந்துகளில் பப்புவா நியூ கினியா அணி வீரர்கள் ஒரு ஓட்டம் கூட பெறவில்லை.வீசிய 4 ஓவர்களையும் பெர்குசன் மெய்டன் ஓவராக வீசியுள்ளதோடு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.