NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை..!

மன்னார்-பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாலம்பிட்டியை சேர்ந்த 61 வயதுடைய தர்மராசா மரியஜேசுதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று(17) பகல் 12.40 மணியளவில் தனது வயல் நிலத்திற்குச் சென்று விஷமருந்திய நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குடும்பத்திற்குள் ஒரு வாரத்திற்கு மேலாக கருத்து முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையிலேயே குறித்த நபர் இவ்வாறு விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles