பொசன் போயா தினத்ததை முன்னிட்டு நாடு முழுவதும் 18,207 தானசாலைகள் உள்ளூர் சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆலயங்களில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
9,425 பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தானசாலைகள் மற்றும் 8,782 ஏனைய உணவு தானசாலைகள் இருப்பதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவுகளை முறையாக சேமித்து வைத்தல், பாதுகாப்பான முறையில் உணவு தயாரித்து வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கவனம் செலுத்துவதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
தானசாலைகளின் பின்னர் குப்பைகளை உரிய முறையில் அகற்றப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் சுகாதார அமைச்சு வலியுறுத்துகிறது. மேலும், கோவில்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை உள்ளாட்சிக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.