NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி..!

நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த நாட்களை விட இன்று சடுதியாக குறைவடைந்துள்ளது.

அதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 703,298 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 24,810 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 198,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் 181,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,710 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 173,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles