பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில்14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. தொழிலாளர் கட்சி கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
பிரிட்டன் பொதுத்தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிட்டிருந்த நிலையில் உமா குமரன் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதுடன், அவருக்கு 19,145 வாக்குகள் கிட்டியுள்ளன. இதன் மூலம், ஈழத்தமிழ் பூர்வீகத்தையும் தமிழ் உணர்வையும் கொண்ட புதிய பாராளுமன்ற உறுப்பினராக ஒருவர் உருவாகியுள்ளார்.