NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிளப் வசந்தவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மலர்ச்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அத்துருகிரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த க்ளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்தவின் சடலத்தை இறுதி அஞ்சலிக்காக பொரளை மலர்சாலையில் வைக்கக் கூடாது என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற அழைப்பு ஒன்றினூடாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொரளை மலர்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துருகிரிய பிரதேசத்தில் (08) திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

Share:

Related Articles