அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இந்தியன் பிரிமியர் லீக் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை விலைக்கு வாங்க குஜராத் டைட்டன்ஸ் சி.ஓ.ஓ அரவிந்தர் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொத்த மதிப்பானது தற்போதைய மதிப்பீட்டின் படி 1 பில்லியன் டொலர்கள் முதல் 1.5 பில்லியன் டொலர்கள் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 2022 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டமும், 2023 ஆம் ஆண்டு இரண்டாம் இடம் பிடித்த அணி குஜராத் டைட்டன்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.