போலந்தில் இலக்கு துறைகளில் இலங்கை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தனது கோரிக்கைகள் தொடர்பாக போலந்து வெளிவிவகார அமைச்சரின் பதில்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.