NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையை வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது T20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்று (ஜூலை 28) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடடியது.

அதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷல் பெரேரா 34 பந்துகளில் 53 ஓட்டங்களை குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பதும் நிசங்க 32 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 26 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹார்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்‌ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அதன்படி வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது போட்டியில் மழை குறுக்கிட்டது.

பின்னர் டக்வத் லூயிஸ் முறைப்பாடி 08 ஓவர்களுக்கு 78 ஓட்டங்கள் பெற வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Yashasvi Jaiswal 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles