NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு- ஒருவர் பலி.

அமெரிக்காவின் நியுயோர்க், ரோசெஸ்டர் நகரிலுள்ள ஒரு பூங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 06 பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 20 வயதுடையவர் என்றும், காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles