கொடகம – அத்துருகிரிய வீதியில் கெப் ரக வாகனமொன்று அறநெறி வகுப்புக்கு சென்றுகொண்டிருந்த மாணவன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மாணவன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த விபத்தில் சிக்கிய மற்றுமொரு 12 வயது மாணவியும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடகமவிலிருந்து அத்துருகிரிய நோக்கி பயணித்த கெப் வண்டி, கொடகம சந்திக்கு அருகில் வீதியோரம் சென்றுகொண்டிருந்த மாணவன் மீது மோதி, முன்னோக்கி இழுத்துச் சென்று, லொத்தர் கடையொன்றில் மோதி நின்றுள்ளது.
அத்தோடு, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.