NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வித்தியாசமான கதையை Action காட்சிகள் மூலம் கூறும் படம் ‘வேதா’ – நடிகை தமன்னா

இயக்குனர் நிகில் அத்வானியின் இயக்கத்தில் நடிகர் ஜான் ஆபிரகாம் ‘வேதா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

அபிஷேக் பானர்ஜி, ஷர்வரி மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது.

‘வேதா’ படத்தில் துணை வேடத்தில் நடிக்கும் தமன்னா பாட்டியா விளக்கம் அளித்துள்ளார். அதாவது, படத்தின் அட்டைப்படத்தை வைத்து மட்டும் வேதாவை மதிப்பிடாதீர்கள், இது ஒரு Action படம் என்பதை விட, வித்தியாசமான கதையை ஆக்சன் காட்சிகள் மூலம் கூறும் படமாகும் என்று கூறினார்.

இந்தபடத்தில் எனது பங்களிப்பு சுமாரானது என்றாலும், அதன் வெளியீட்டைப் பற்றி நான் உண்மையிலேயே மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்று கூறினார்.

Share:

Related Articles