NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனது பங்களாவை ரூ.40 கோடிக்கு விற்கிறார் கங்கனா

நடிகை ‘கங்கனா ரனாவத்’   இயக்கி, நடித்துள்ள ‘Emergency’ September 6 வெளியாக இருக்கிறது.

அவருக்கு மும்பை பாந்த்ரா அருகில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட பங்களா உள்ளது. அங்கு தனது தயாரிப்பு நிறுவன அலுவலகத்தையும் அவர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்தப் பங்களாவை ரூ.40 கோடிக்கு அவர் விற்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன், விதிகளை மீறிக் கட்டப்பட்டதாகக் கூறி இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி இடித்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles