NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருச்சி சிறையிலிருந்து தப்பிச் சென்ற இலங்கை கைதி..!

தமிழகத்தின் திருச்சி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் தப்பிச் சென்றிருந்த நிலையில் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அங்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதான இலங்கையர் ஒருவர் தப்பிச் சென்றிருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை, பங்களாதேஷ், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சிலரும் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு நேற்றைய தினம் (08) விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, சில கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles