NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப் நேரடி விவாதம்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இந்நிலையில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி எதிர்வரும் மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதுகுறித்து டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், விவாதங்களை நடத்துவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் விவாதங்களை எதிர் நோக்குகிறேன். ஏனென்றால் நமது சாதனை நேராக மக்களை சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக புதிதாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் 5 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸ் 42 சதவீதமும், டிரம்ப் 37 சதவீதமும் ஆதரவை பெற்றுள்ளனர்.

Share:

Related Articles