சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பாட்மின்டன் வீரர் நிலூக்க கருணாரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவான முதலாவது இலங்கை வீரர் நிலூக்க கருணாரத்ன ஆவார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையிலிருந்து தெரிவான முதலாவது நபர் என்ற வகையில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இதன் மூலம் இலங்கைக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
நிலூக்க கருணாரத்ன 17 வருடங்கள் தேசிய ஒற்றையர் பட்மின்டன் சம்பியனாக இருந்ததுடன், 3 ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் பங்குபற்றியவராவர். அத்துடன் பல்வேறு சர்வதேச பட்மின்டன் போட்டிகளிலும் வெற்றிகளையும் ஈட்டிய பெருமைக்குரியவர்.