NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மறுபிறவி எடுத்து வந்த டயானா! இப்போது அவுஸ்திரேலியாவில் பிறந்திருக்கிறாரா?

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேவிட் காம்பெல், இவர் அங்குள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில், தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகன் பெயர் பிள்ளி காம்பெல்

இங்கிலாந்து இளவரசி டயானா, தற்போது மறுபிறவி எடுத்து, தன்னுடைய மகனாகப் பிறந்துள்ளதாக டேவிட் காம்பெல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து டேவிட் சொன்னதாவது:

“1997இல் இளவரசி டயானா மகிழுந்து விபத்தில் இறந்துவிட்டார்.

அவர் இறந்து 18 வருடங்களுக்குப் பின் தான் பிள்ளி எனக்குப் பிறந்தான்.

2 வயதுக் குழந்தையாக இருந்தபோதே, டயானாவின் புகைப்படத்தைக் காட்டி, “அது நான்தான்” என்று மழலை வார்த்தைகளில் சொன்னான்.

நாங்கள் அனைவருமே இதைக் கேட்டுச் சிரித்துவிட்டோம்.

குழந்தை ஏதோ வேடிக்கையாகப் பேசுகிறான் என்று நினைத்தோம்.

ஆனால், 4 வயதில், டயானா பற்றிய வாழ்க்கை விவரங்களைச் சொல்ல ஆரம்பித்துவிட்டான்.

டயானாவின் வாழ்க்கை, அவரது துயர மரணம் இதுகுறித்தெல்லாம் துல்லியமாக பிள்ளி சொன்னான்.

அவன் பேசியதைக் கேட்டு, நானும் என் மனைவியும் அதிர்ச்சியடைந்தோம்.

காரணம், அதுவரை டயானா பற்றியோ, இங்கிலாந்து அரச குடும்பம் பற்றியோ நாங்கள் இவ்வளவு துல்லியமாக அறிந்திருக்கவில்லை.

டயானாவுக்கு ஜான் என்ற உடன்பிறந்த அண்ணன் இருந்தாராம்.

டயானா பிறக்கும் முன்பே ஜான் இறந்துவிட்டாராம்.

அதனால்தான், டயானா இருக்கும்போது, ஜான் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வரவில்லை.

ஆரம்பத்தில் பிள்ளியின் பேச்சை நம்பாமல் இருந்த நாங்கள், இதற்கு பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக நம்ப ஆரம்பித்தோம்.

அதேபோல, டயானாவின் இன்னொரு புகைப்படத்தையும் நாங்கள் பிள்ளியிடம் காட்டினோம்.

நான் ஒரு இளவரசியாக இருந்தேன்.

ஒருநாள் சைரன் ஒலித்தபடி வண்டிகள் வரிசையாக வந்தன, அப்போதுதான் நான் இனிமேல் இளவரசி இல்லை என்பதை உணர்ந்தேன் என்று பிள்ளி சொன்னதுமே, எங்களுக்குத் தூக்கி வாரிப்போட்டது” எனக் கூறியுள்ளார்.

டேவிட்டின் இந்த பேச்சுதான் இணையத்தில் பேசுப்பெருளாக மாறியுள்ளது.

அப்படியானால், டயானாவின் மறுபிறவிதான் பிள்ளியா? ஜான் பற்றிப் பிள்ளிக்கு எப்படித் தெரியும்?” என்றெல்லாம் சர்வதேச அளவில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

டயானா இறந்து பலவருடமாகியும், இன்னும் அவரை பற்றின சர்ச்சைகள் ஓயவில்லை என்பது நிதர்சனம்.


Share:

Related Articles