NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை விளையாட்டு திருவிழாவின் லைக்கா உதைபந்தாட்டக் கிண்ணம் ரென்ஓன் வசம்!

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை விளையாட்டுத் திருவிழா 2024, 7 விளையாட்டுக்களை உள்ளடக்கிய விளையாட்டு திருவிழா கொழும்பில் 16, 17,18ஆம் திகதிகளில் கோலாகலாமாக இடம்பெற்றது.

லைக்கா ஞானம் அறக்கட்டளை, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து பாடசாலை, மகளிர் மற்றும் ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டிகளை நடாத்தியிருந்தது. குறித்த போட்டிகளின் வெற்றியாளர்களுக்கான லைக்கா கிண்ணத்தினை பாடசாலை மட்டத்தில் ஹமீட் அல் குசைனீ கல்லூரி, மகளீருக்கான போட்டியில் ரென்ஓன் பெண்கள் விளையாட்டுக் கழகமும், கழகங்களுக்கான போட்டியில் ரென்ஓன் விளையாட்டுக் கழகமும் தம்வசப்படுத்திக் கொண்டன. குறித்த போட்டிகளுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வு நேற்று (18) அன்று மாலை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

லைக்கா ஞானம் அறக்கட்டளையானது, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து தேசிய ரீதியிலான உதைபந்தாட்ட முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles