இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி கணுக்கால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ரஞ்சி கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவர் நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் இணைவார் எனவும் குறிப்பிடப்படுகிறது.
ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் இடம்பெறும் ரஞ்சி கிண்ணத் தொடரில் அவர் பங்கேற்பார் என அறிய முடிவதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.