NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாடெங்கும் நமது கொடி பறக்கும்.. தமிழ்நாடு இனி சிறக்கும் தொனியில் TVK கட்சிக் கொடி மற்றும் பாடல் அறிமுகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடல் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையை செயலகத்தில் தவெக தலைவர் விஜய் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். அதேபோல கட்சியின் படல்களையும் அவர் வெளியிடுகிறார். இதன் மூலம் தவெக அரசியல் கட்சியாக முழு வடிவம் பெறுகிறது.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கட்சி கொடிப் பாடலை வெளியிட்டு, கொடியை வியாழக்கிழமை ஏற்றி வைக்கிறோம். வியாழக்கிழமை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 9.15 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை நிலைய செயலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தவெக கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் பாடல்களையும் வெளியிடுகிறார். இதற்காக 300க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் நிர்வாகிகள் அதிகாலை 6 மணிக்கே பனையூரில் குவிய தொடங்கியுள்ளனர்.

Share:

Related Articles