NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெங்கு அபாய வலயங்களாக 29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம்!

டெங்கு அபாய வலயங்களாக 29 வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் 29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளை முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு அந்த வைத்திய அதிகாரி பிரிவுகளில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 36,552 ஆக பதிவாகியுள்ளதுடன், அதில் 15,120 டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles