பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இன்று காலை 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டமூலம் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை 9.30 மணி முதல் 10.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.