சீனாவின் ஷான்டோங் (Shandong) மாகாணத்தில் பாடசாலை பேருந்து ஒன்று வீதியோரம் நின்றிருந்த சிலர் மீது மோதியதில் ஐந்து மாணவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பஸ் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து, இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.