வரிகளைக் குறைப்பதால் மீண்டும் நாடு நெருக்கடிக்குள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வரியைக் குறைப்பதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கூறுவதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, 2019 இல் கோட்டாபய வரியைக் குறைத்ததையடுத்து 2022 இல் நாடு வீழ்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.
எனவே, வரிகளைக் குறைப்பதால் மீண்டும் நாடு நெருக்கடிக்குள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.