தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ளது.
இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 2,849 மையங்களில் காலை 09:30 மணிக்குப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
மேலும்,பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மாணவர்களை தமக்கு நியமிக்கப்பட்ட பரீட்சை நிலையங்களுக்குச் சரியான நேரத்தில் வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பரீட்சை நிலையங்களுக்கு அருகில் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன்,90 நியமிக்கப்பட்ட மையங்களில் இருந்து 100 மீட்டருக்குள் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.