NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய அரசாங்கத்துக்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் முழு ஆதரவு வழங்க இணக்கம்!

அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படை தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடி ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கவும், இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்கவும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் இதன்போது இணக்கம் தெரிவித்தது.

Share:

Related Articles