NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 7ஆம் திகதி தொடங்குகிறது.

தொடரின் முதல் இரு போட்டிகள் முல்தான் நகரில் ஒக்டோபர் 7ஆம் திகதி தொடங்கவுள்ளது. 3ஆவது போட்டி ஒக்டோபர் 24 தொடக்கம் 28 வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

அத்துடன், தொடருக்கான இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எனினும், அவருக்கு பதிலாக மாற்றுவீரர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles