2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
வேட்புமனுக்களை ஏற்கும் ஆரம்ப நாளிலும், வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் நாளிலும் ஊர்வலங்கள் மற்றும் குழு நடத்தைகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கும் தேர்தல் நடைபெறும் திகதிக்கும் இடையில் பாதுகாப்பு மற்றும் அரசாங்க அச்சகத்தின் பணிகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப் பணத்தை ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 58 தரப்பினர் கட்டுப்பணத்தை வைப்பு செய்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதல் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தர்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி 22 தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் அந்தந்த மாவட்டச் செயலகங்களில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.