NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாக்களிப்பு தொடர்பில் விசேட தேவையுடையோருக்கான அறிவிப்பு..!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் விசேட தேவையுடையோர் வாக்களிக்கும் போது வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, உடனழைத்து செல்லும் உதவியாளர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, அவர் வேட்பாளர் ஒருவரின் முகவராகவோ அல்லது வாக்களிப்பு நிலையத்தின் முகவராகவோ இருக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, விசேட தேவையுடையோர் வாக்களிப்பதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்லும் போது உரிய தகுதிச் சான்றிதழை வாக்களிப்பு நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles