புத்தளம் – ஆனமடுவ பகுதியில் அறுபது அடி ஆழமுள்ள பெரிய கருங்கல் குழிக்குள் கார் ஒன்று விழுந்ததில் ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவ, தோணிகல, ஒருகல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான சமிந்த உபுல் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (31) அதிகாலையில் குறித்த நபர் தனது காரில் கல் குவாரி ஒன்றிற்கு சென்று கொண்டிருந்த போது கார் வழுக்கிச் சென்று பெரிய கருங்கல் குழிக்குள் விழுந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர் தற்போது விவசாயம் செய்பவரெனவும், இதற்கு முன்னர் கிரானைட் குழிகள் அமைத்து கிரானைட் அகழ்வில் ஈடுபட்டு வந்தவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.