NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதுளை பஸ் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவன் தப்பி ஓட்டம்..!

பதுளை பஸ் விபத்தில் சிக்கி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

ஜா – எல அலெக்சாண்டர் மாவத்தை பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles