இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் தெற்கு லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்நிலை தளபதி கொல்லப்பட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹஸன் நசரல்லா இஸ்ரேல் இராணுவத்தால் கடந்த செப்டம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து புதிய தலைவராக நயீம் காஸிம் தலைமையேற்றார்.
கடந்த சில வாரங்களில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் பல முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்நிலை தளபதி அபு அலி ரிதா நேற்று நடத்தப்பட்டத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் மீது ரொக்கெட் தாக்குதல்கள் மற்றும் டேங்கர்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை செயல்படுத்துவது, ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவது போன்ற பொறுப்புகளில் அபு அலி ரிதா செயல்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.