கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வெளிநாட்டுப் பண அனுப்பல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டுப் பண அனுப்பல் 4,345 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.
எனினும், இது இந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4,844 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், இது 11.05 சதவீத அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.