NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..!

குருநாகல் பகுதியில் பிரமிட் திட்டம் மூலம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிரமிட் திட்டம் மூலம் 1.8 பில்லியன் ரூபாவை நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 52 வயதான ஆண் ஒருவரும் அவரது மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று முற்பகல் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles