தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் கொள்வதாக கனடா – ஒன்டாரியோவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியின் மரிட்ஸ் டைல்ஸ்தெரிவித்துள்ளார்.
தமிழ்ஈழ தேசிய கொடி தினத்தை குறிக்கும் நிகழ்வு குறித்து விடுத்துள்ள செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடரிபில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தமிழீழ தேசிய கொடி தினத்தில், ஒன்டாரியோவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் தமிழ் சமூகத்தின் வரலாற்றையும் கலாசாரத்தையும் கௌரவிககப்படுகிறது. அதேவேளை, இது தமிழ் சமூகத்தின் உறுதிப்பாட்டையும், வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ் சமூகம் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்திற்கான உத்வேகத்தை அளிக்கின்ற ஒரு சமூகம்.
தமிழீழ தேசிய கொடி தினம் தமிழனப்படுகொலை மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட தமிழ் மக்கள் அனுபவித்த வன்முறைகளை நினைவுகூரும் நாளாகும். இந்த அட்டூழியங்கள் நினைத்துப்பாக்கமுடியாத வலியையும் துயரத்தையும் ஏற்படுத்தின. புதிய ஜனநாயக கட்சியினராகிய நாங்கள் தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் கொள்கின்றோம் என்றார்.