பதுளை மீகஹகிவுல அங்கலா உல்பத் கிராமத்தில் தனது மனைவியின் மோதிர விரலை தவிர ஏனைய 4 விரல்களையும் கணவன் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கணவனால் தனது வலது கையின் நான்கு விரல்களும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், முகத்தையும் கழுத்தையும் கூரிய ஆயுதத்தால் வெட்டியதில் பலத்த காயமடைந்த பெண், பதுளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
32 வயதுடைய பெண்ணே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவன் கந்தகெட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த பெண்ணின் கையிலிருந்து வெட்டப்பட்ட விரல்களை பிரதேசவாசிகள் போத்தல் ஒன்றின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுவந்துள்ளனர்.
முதற்கட்ட சிகிச்சை அளித்த பின்னர், மீகஹகிவுல வைத்தியசாலை ஊழியர்கள் விரல்களுடன் பெண்ணை பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.