NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் அமைச்சர் காதர் மஸ்தான் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக தொழிலதிபர் ஒருவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை..!

இணையவழி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் காதர் மஸ்தான் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதற்காக தொழிலதிபர் ஒருவருக்கு 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரைப் பற்றிய தவறான தகவல்களை உள்ளடக்கிய ஒலிப்பதிவுகளை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் பரப்பியதாக வர்த்தகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே சந்தேகநபருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஐயாயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொண்டுவரப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles