இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சுனில் குமார கமகே, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகர மற்றும் தேசிய விளையாட்டு சங்கங்கள் மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளை அடையாளம் காணும் விசேட கூட்டம் இன்று (02) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அருண பண்டார, விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமல் பெர்னாண்டோ உட்பட தேசிய விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.