விவசாயிகளின் உற்பத்தி செலவினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் பதுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டு வருவதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை நீக்கமுடியும் என தேசிய கமநல அதிகாரசபையின் தலைவர் திலக் பண்டார தெரிவித்துள்ளார்.
தேசிய கமநல அதிகார சபையின் ஊடக சந்திப்பு இன்று மட்டக்களப்பிலுள்ள கம நல அபிவிருத்தி திணைக்களத்தி; இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.