NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையீடே காரணம் – வசந்த சமரசிங்க..!

நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையீடே காரணமென வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பண்டிகைகளின் போது பொருட்களின் விலை அதிகரிப்பது சந்தையில் பொதுவான நிலை எனவும், எனவே எதிர்காலத்தில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையிட்டு நாட்டில் பொருட்கள் பற்றாக்குறையை உருவாக்கியதாகவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்கிறோம் எனவும் சந்தையில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரச நிறுவனங்கள் மூலம் தலையிடுவதற்கு அரசாங்கமாக தாங்கள் பணியாற்றி வருகிறோம் எனவும் குறிப்பாக சதொச மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை 25வீதம் குறைக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும், பண்டிகைக் காலங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles