குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மகன் தாக்கியதில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடகவெல, பிசோகொடுவ பகுதியில் இன்று (15) அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்பாய, பல்லேபெத்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.