NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்த தீர்மானம்!!

எதிர்காலத்தில் மருந்துகளை பரிசோதிக்க பல ஆய்வகங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தால் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த எதிர்பார்ப்பதாக அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சுகாதார அமைச்சின் செயலாளர் இவ்வாறு தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சுகாதார நிலைமைகள் மதிப்பிடப்படும் பல்வேறு நேரங்களில் இந்த சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றும், ஆனால் முறைப்பாடுகள் இருந்தால் மட்டுமே தாம் அதைத் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டடார்.

அரசாங்கம் இப்போது இலங்கையில் ஒன்று அல்லது இரண்டு ஆய்வகங்களை நிறுவுவதில் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும்இ இந்த சுகாதார அமைப்பு ஒரு அரச சுகாதார அமைப்பாக இருப்பதால் மற்றும் மருந்துகளின் விநியோகம் மையப்படுத்தப்பட்டிருப்பதலாலும் கொள்முதல் செயல்முறை பல வளர்ந்த நாடுகளில் மருந்துகளின் கொள்முதல் செயல்முறையை விட பெரியது என்பதைக் குறிக்கிறது என்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles