கடந்த வருடம் நாட்டின் சுற்றுலா வருமானமாக 3.17 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 53.2 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டு சுற்றுலா வருமானமானது 2.0 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது.
கடந்த வருடம் 20 இலட்சத்து 53, 465 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்.
இந்த வருடம் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.