NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடுகிறது..

பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடுகிறது

சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கடந்த 10 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 முதல் காலை 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, காலை10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது

முற்பகல் 11.00 மணி முதல் முற்பகல் 11.30 வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்று, 22 ஆம் திகதி புதன்கிழமை இரண்டாவது நாள் விவாதத்துக்காக ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 22 ஆம் திகதி புதன்கிழமை, காலை 9.30 முதல் காலை 10.00 மணி வரை நிலையியல் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது

முற்பகல் 11.00 மணி முதல் முற்பகல் 11.30 வரை நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இரண்டாவது நாளாகவும் இடம்பெறும்.

ஜனவரி 23 ஆம் திகதி வியாழக்கிழமை, காலை 9.30 முதல் காலை 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்துஇ காலை 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது

முற்பகல் 11.00 மணி முதல் முற்பகல் 11.30 வரை நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2413ஃ37 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் 2399ஃ16 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2384ஃ35 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2377ஃ39 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனையடுத்து, பிற்பகல் 3.30 முதல் மாலை 5.30 வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக முழு நாளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், ருக்மன் சேனாநாயக்க, ரொஜினோல்ட் பெரேரா, சிறினால் த மெல் மற்றும் மொஹமட் இல்யாஸ் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக அன்றைய தினம் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நேரம் ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles