டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வது தொடர்பான பா.ஜ.க. உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதன்போது, டெல்லியின் முதலமைச்சராக ரேகா குப்தா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ரேகா குப்தா டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
இதன்படி, இன்று மாலை டெல்லி முதலமைச்சரின் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் 4:30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.